சென்னை: காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பை கட்டாயமாக்க காவல் துறை தலைமை முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு சிறப்பு காவல் துறை தலைவர் ராஜேஷ் தாஸ் சமீபத்தில் காவல் துறையினர் நலன் சார்ந்தது தொடர்பாக காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில், 6 நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் விடுப்பு கொடுக்கலாம் என்று காவல்துறை அலுவலர்கள் தரப்பில் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக கரோனா காரணமாகவும், உடல் நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதால், இதனை தடுக்க, வார விடுப்பை கட்டாயப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நாளாக இந்த கோரிக்கை இருப்பதால், ஆலோசித்து விரைந்து முடிவு எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.