ETV Bharat / city

தைப்பூசத் திருவிழாவுக்குப் பொது விடுமுறை அறிவிப்பு

author img

By

Published : Jan 5, 2021, 10:50 AM IST

Updated : Jan 5, 2021, 2:56 PM IST

தைப்பூசத் திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு

10:47 January 05

தமிழ்க்கடவுள் முருகனை வழிபடும் முக்கியத் திருவிழாவான 'தைப்பூசம்' திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

ஜனவரி 28ஆம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில்  கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது, தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
 
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்குப் பொது விடுமுறை
அளிக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தனர். 

இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28ஆம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும், ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் இனி பிரசாதமாக சர்க்கரை பால்!

Last Updated : Jan 5, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.