சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து சொத்து வரி உயர்வை கண்டித்து பாஐகவினர் வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவினர், “சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறித்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பா.ஜ.கவினர் மத்திய அரசிடம் வலியுறுத்த இருக்கிறோம்” என்றனர்.
தொடர்ந்து, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ‘தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் வரிச் சுமையை ஏற்றி இருக்கிறார்கள். வரியை குறைக்க வேண்டும் என கோரி இருந்தோம்.
சொத்து வரி உயர்வை கண்டித்து வெளி நடப்பு செய்து இருக்கிறோம். மத்திய அரசு 15ஆவது நிதி ஆணையம் வரி விதிப்பு முறைப்படுத்த வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறது. சொத்துவரியை உயர்த்துமாறு குறிப்பிடவில்லை” என்றார்.
இதையும் படிங்க:சொத்து வரி உயர்வு ஏன்? அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!