நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இதனை ஒட்டி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தங்களது துறை சார்பான கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்துரைத்தனர்.