சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 993 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 ஆயிரத்து 84 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 322ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 82 ஆயிரத்து 778ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 666ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 23 ஆயிரத்து 146 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக 6 கோடியே 10 லட்சத்து 48 ஆயிரத்து 159 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் விலக்குக்கு 'நோ' சொல்லும் மத்திய அரசு - ராகுல் ஆவேசம்