தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் 2018ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஆலையை மூடியது தமிழ்நாடு அரசு. இதனையடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இவ்வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு 28 நாட்கள் விசாரித்தது. அப்போது ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழ்நாடு அரசு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வேளையில் நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டனர்.
ஸ்டெர்லைட் உடன் கைக்கோர்க்கும் சென்னை ஐஐடி!
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு டிசம்பர் 16 முதல் 20ஆம் தேதி வரை வழக்குகளை விசாரிக்கப் பட்டியலிடப் பட்டுள்ளதால், மீண்டும் ஸ்டெர்லைட் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் டிசம்பர் 16ஆம் தேதி ஸ்டெர்லைட் வழக்குகள் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘உயிர் பலி... பல்வேறு போராட்டங்கள்’ ஆலையையும் மூடியாச்சு..! ஆனா கழிவு?