கடந்த ஜனவரி 4,5,11,12 ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற, திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய ( படிவம் 7 ) 1 லட்சத்து 2 ஆயிரத்து 210 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (படிவம் 8 ) 1 லட்சத்து 73 ஆயிரத்து 926 பேரும், முகவரி மாற்றம் செய்ய ( படிவம் 8 A ) 1 லட்சத்து 8 ஆயிரத்து 548 பேர் என மொத்தம் 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ள நிலையில், நாளை முதல் முகாம்களில் பெற்ற விண்ணப்பங்களும், இதரப் பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவிலிருந்து அதிமுக விலகும் நேரம் குறித்த கேள்வி - ஜெயக்குமாரின் பகீர் ரியாக்ஷன்