தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலைகள் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
திமுகவின் முதலமைச்சர் வேட்பாளரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டு, முதல் தேர்தல் நடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து பத்தாண்டுகளாக அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார்.
இந்தத் தேர்தலிலும் அத்தொகுதியில் அவரே வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பின் பிரதிபலிப்பாக அவர் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி ஸ்டாலின், அதிமுக வேட்பாளரைவிட 12 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவருகிறார்.
குறிப்பாக முதல் சுற்றில் ஆயிரத்து 754 வாக்குகளும் 2ஆம் சுற்றில் ஆயிரத்து 943 வாக்குகளும் 3ஆம் சுற்றில் 2 ஆயிரத்து 211 வாக்குகளும் 4ஆம் சுற்றில் ஆயிரத்து 684 வாக்குகளும் 5ஆம் சுற்றில் 3 ஆயிரத்து 467 வாக்குகளும் 6ஆம் சுற்றில் 3 ஆயிரத்து 140 வாக்குகளும் அவர் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமைவிட அவர் 12 ஆயிரத்து 70 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.