தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 16 கோடியே 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகள் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 74 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதிக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், ஐந்தாவது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற கே.சகாயபாரதிக்கு 40 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையும், 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற டி.குகேஷுக்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையும் முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளம் , பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உதயமான 5ஆவது புலிகள் சரணாலயம்!