ETV Bharat / city

பரியேறும் பெருமாள்களும் ஆரிய அரசியலும்!

author img

By

Published : Jun 1, 2019, 6:40 PM IST

பரியேறும் பெருமாள் கதாநாயகனைப் போல தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கில மொழியைப் படித்து தேர்ச்சி பெறவே அல்லல்படும் நிலையில், அவர்களை பள்ளிக் கல்வியையே தாண்ட முடியாத அளவுக்கு, மும்மொழிக் கொள்கை என இந்தி திணிப்பை கையிலெடுத்திருக்கிறது பாஜக அரசு.  அது பற்றிய ஒரு சிறப்புப் பார்வை...

pariyerum perumal

ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி வாசலைத் தொடவே சமூகத்திலும் உளவியல் ரீதியாகவும் எவ்வளவு இடர்பாடுகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை பொட்டில் அறைந்தாற்போல் எடுத்துரைத்த படம் பரியேறும் பெருமாள்! தாய்மொழியில் கற்ற அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற விளிம்புநிலை மாணவன், அந்நிய மொழியான ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பான். அதற்குக் காரணம் அவனது குடும்ப, பொருளாதார, சமூகச் சூழல்களே!

pariyerum perumal
வகுப்பறையில் அவமதிக்கப்படும் பரியேறும் பெருமாள்

இந்தி திணிப்பும் - தமிழகத்தின் எதிர்ப்பும்

1937-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார். அவரது நண்பரும் சீர்திருத்தச் செம்மலுமான பெரியார் "தமிழர்களை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதற்கான அடிப்படை முயற்சியே இந்தி திணிப்பு" என முழங்கினார். திராவிட இயக்கத்தோடு, நீதிக்கட்சியும் சேர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தினிடையே இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள் பெண்கள் என 1198 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து விலகிய பின்னர் 1940இல் சென்னை மாகாண ஆளுநர் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை திரும்பப் பெற்றார். இதனையடுத்து இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களும் முடிவுக்கு வந்தன.

triple language formula
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

வறுமைக்கோடும் - வர்ணாசிரமக் கொள்கையும்

'இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது' 'இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்ற வாசகங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் அவற்றின் அடிப்படை நுணுக்கங்களை ஆராய்ந்தால், இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் வாழும், சிறுகுறு விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தங்களின் வயிற்றுப்பாட்டுக்கே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற தனிக்கதை நீளும்.

triple language formula
வர்ணாசிரமக் கொள்கை

1985ஆம் ஆண்டு 94 விழுக்காடாக இருந்த கிராமப்புற வறுமை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2005இல் 61 விழுக்காடாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு மத்தியில் மாறிமாறி ஆட்சியமைத்த காங்கிரஸ், பாஜக அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விழுக்காடு தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவித்தாலும், விலைவாசி உயர்வுக்கேற்ப வறுமைக்கோடு கணக்கிடுவதற்கான அடிப்படை வருமானமே மிகக்குறைவாக உள்ளது என்பதும், தற்போது எடுக்கப்படும் மதிப்பீடுகள் தோராயமாகவே கணக்கிடப்படுவதாக விமர்சனங்கள் எழுவதும் இன்னொரு கதை.

அவற்றை ஒதுக்கிவிட்டு கல்வி விஷயத்தை கவனித்தால்... ஏழைகள் அவர்களின் வருமானத்தில் 80 விழுக்காட்டை உணவுக்காகவே செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் அக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வது எவ்வாறு?

triple language formula
கல்விக்கண் திறந்த காமராசர்

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குழந்தைகளுக்கும் கல்விக்கண் திறக்க பெரும்பங்காற்றியவர் பெருந்தலைவர் காமராசர். அதன்பிறகு அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்டோரின் சமூக சீர்திருத்தங்களால், கற்றலின் அவசியம் உணர்ந்து, உயர்கல்வியை முடித்து தனது திறனாலும், இடஒதுக்கீட்டின் உதவியோடும், அரசுத்துறையில் உயர் பதவிகளையும் வகிக்கும் அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்து வருகின்றனர். ஆனால் "தான் பல்லக்கில் செல்ல வேண்டுமானால், அதைத் தூக்குவதற்கு நான்கு பேர் தேவை" என்ற மனுதர்மத்தில் ஊறிய ஆரிய அரசியல், மொழித்திணிப்பின் மூலம் நவீன முறையில் வர்ணாசிரமக் கொள்கைகளை அமல்படுத்துகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

triple language formula
ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய பெரியார், அண்ணா, அம்பேத்கர்

தேசிய மொழித் தேவையும் - விளிம்புநிலை மாணவர்களும்

'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது' எந்தவொரு நாட்டுக்கும் தேசிய மொழி என்பது தேவை என்று வாதிடுகின்றனர் ஒரு தரப்பினர். ஆனால் இந்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, உலகின் பழமை வாய்ந்த மொழிகளில் முதன்மையான செம்மொழியான தமிழ்மொழிக்கு ஏன் கொடுக்கக்கூடாது? என்பதே மற்றொரு தரப்பின் வாதம். இந்தியாவில் அதிக மாநிலங்களில் பேசப்படும் மொழியைத்தான் தேசிய மொழியாக்க முடியும் என்றாலும், அதை விருப்பத்தோடு கற்க வகை செய்யலாமே? இந்தி மொழியிலும் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த வகுப்புக்கே செல்ல முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளை பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தக்கூடாது என்பதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

pariyerum perumal
வறுமையில் வாடும் குழந்தைகள்

குழந்தைகள் உளவியலும் - அந்நிய மொழியும்

“குழந்தைகளுக்கு அறிவியலை ஒரு அந்நிய மொழியில் கற்பிக்க முயல்வது இயற்கைக்கு மாறானது, அறநெறிக்குப் புறம்பானது என்று நான் கருதுகிறேன். அவர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்வார்கள், ஆனால் அறிவியல் உணர்வை இழப்பார்கள்” என்று கூறியிருக்கிறார் இந்தியாவின் சிறந்த இயற்பியல் அறிவியலாளர் சர் சி.வி. இராமன். அந்த வகையில் எந்த மொழியையும் விருப்பத்தின்பேரில் கற்கச் செய்யலாமே தவிர திணிக்க முயல்வது இயற்கைக்குப் புறம்பானது மட்டுமல்ல, குழந்தைகளின் உளவியலை பாதிக்கக்கூடியதும் ஆகும்.

triple language formula
அரசுப் பள்ளி மாணவர்கள்

ஏற்கெனவே மத்திய அரசு 'ஹிந்தி பிரசார் சபா' போன்றவற்றின் மூலம் இந்தி பேசப்படாத மாநிலங்களிலும் இலவசமாக கற்றுக்கொடுத்து இந்திக்கு ஊட்டமளித்து வளர்த்து வருகிறது. அந்த வகையில், பள்ளிக்கூடத்திலும் இந்தியை ஒரு பாடமாக வைத்து விருப்பமும் திறமையும் உள்ள மாணவர்களை தனித்தேர்வுகளை எழுதி இந்தியில் புலமைபெற ஊக்கப்படுத்தலாமே தவிர, மும்மொழிக்கொள்கை என்று இந்தியைத் திணிப்பதால் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் கல்விக்கனவு கலைக்கப்படும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

பட்டதாரிகளும் - வேலையில்லாத் திண்டாட்டமும்

2017ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த 140 துப்புரவாளர் பணியிடங்களுக்கு இரண்டாயிரத்து 500 பேர் தேர்வை எழுதினர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.பில்., படித்த முதுகலைப் பட்டதாரிகளும்கூட தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இந்த லட்சணத்தில் இருக்கும் போது, தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கான அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி தேர்வில்கூட தமிழ் தெரியாத பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு ரத்தினக் கம்பளத்தை விரித்திருப்பதான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியதும், வெளி மாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதி 1955ஆம் ஆண்டுமுதலே அமலில் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்ததும் தனிக்கதை.

triple language formula
தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை

இந்தி திணிப்பும் - தமிழகத்தின் இட ஒதுக்கீடு அழிப்பும்

பல்வேறு போராட்டங்களுக்கிடையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மிக அதிக இடஒதுக்கீடு (69%) அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டினால், உயர்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு எவ்வளவு திறமையிருந்தாலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறைவான வாய்ப்பே கிடைப்பதாகவும், திறமையே இல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுவதாகவும் ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களைப்போலவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்தி திணிப்பால் முழுக்க முழுக்க பாதிக்கப்படப் போவது தமிழகம்தான்.

triple language formula
போராட்டம்

ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள கிராமப்புறக் குழந்தைகள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவே திண்டாடி வரும் நிலையில், ஆங்கிலப் பாடத்தை அவர்கள் விருப்பத்துடன் கற்கும் வகையில், திறமையான ஆசிரியர்களை உருவாக்கி கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்நிலையில், இந்தியும் திணிக்கப்பட்டால், கிராமப்புற ஏழை, எளிய சமூகத்துக் குழந்தைகள் பள்ளிப்படிப்பையே தாண்ட முடியாமல் முடங்கிப்போவர் என்பதோடு, அதிக இடஒதுக்கீடும் தானாக ஒழிந்துவிடும் என்ற உள்நோக்கத்தையும் புரிந்து விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் ஆரியர்களின் வர்ணாசிரமக் கொள்கைப்படி மக்கள் சாதிவாரியாக பிரித்தாளப்பட்டு, "ஆண்டான்-அடிமை" என்று வாழ்ந்தனர். பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சமூக சீர்திருத்தப் போராட்டங்களின் பயனாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் இப்போதுதான் ஓரளவுக்கேணும் கல்வியறிவையும் வேலை வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள். ஆனால் அவர்களை ஆதிக்க சாதியினருக்கு அடிமை வேலையை செய்யும் நிலைக்கே மீண்டும் தள்ளிவிடாமல் - தவறான கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக எதிர்க்கட்சிக்கு மட்டுமல்லாது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இருக்கிறது.

Intro:Body:

பரியேறும் பெருமாள்களும் ஆரிய அரசியலும்!

Summary: பரியேறும் பெருமாள் கதாநாயகனைப் போல தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கில மொழியைப் படித்து தேர்ச்சி பெறவே அல்லல்படும் நிலையில், அவர்களை பள்ளிக் கல்வியையே தாண்ட முடியாத அளவுக்கு, மும்மொழிக் கொள்கை என இந்தி திணிப்பை கையிலெடுத்திருக்கிறது பாஜக அரசு.  அது பற்றிய ஒரு சிறப்புப் பார்வை... 

ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி வாசலைத் தொடவே சமூகத்திலும் உளவியல் ரீதியாகவும் எவ்வளவு இடர்பாடுகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கின்றன என்பதை பொட்டில் அறைந்தாற்போல் எடுத்துரைத்த படம் பரியேறும் பெருமாள்!  தாய்மொழியில் கற்ற அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற விளிம்புநிலை மாணவன், அந்நிய மொழியான ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பான்.  அதற்குக் காரணம் அவனது குடும்ப, பொருளாதார, சமூகச் சூழல்களே! 

(பரியேறும் பெருமாள் படத்தில்...)

இந்தி திணிப்பும் - தமிழகத்தின் எதிர்ப்பும்

1937-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.  அவரது நண்பரும் சீர்திருத்தச் செம்மலுமான பெரியார் "தமிழர்களை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதற்கான அடிப்படை முயற்சியே இந்தி திணிப்பு" என முழங்கினார்.   திராவிட இயக்கத்தோடு, நீதிக்கட்சியும் சேர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தினிடையே இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  போராட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள் பெண்கள் என 1198 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து விலகிய பின்னர் 1940இல் சென்னை மாகாண ஆளுநர் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை திரும்பப் பெற்றார். இதனையடுத்து இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களும் முடிவுக்கு வந்தன.

வறுமைக்கோடும் - வர்ணாசிரமக் கொள்கையும்

'இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது'  'இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்ற வாசகங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத்தான் தோன்றும்.  ஆனால் அவற்றின் அடிப்படை நுணுக்கங்களை ஆராய்ந்தால், இன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் வாழும், சிறுகுறு விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தங்களின் வயிற்றுப்பாட்டுக்கே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற தனிக்கதை நீளும்.

1985ஆம் ஆண்டு 94 விழுக்காடாக இருந்த கிராமப்புற வறுமை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2005இல் 61 விழுக்காடாக குறைக்கப்பட்டது.  அதன்பிறகு மத்தியில் மாறிமாறி ஆட்சியமைத்த காங்கிரஸ், பாஜக அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விழுக்காடு தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவித்தாலும், விலைவாசி உயர்வுக்கேற்ப வறுமைக்கோடு கணக்கிடுவதற்கான அடிப்படை வருமானமே மிகக்குவாக உள்ளது என்பதும், தற்போது எடுக்கப்படும் மதிப்பீடுகள் தோராயமாகவே கணக்கிடப்படுவதாக விமர்சனங்கள் எழுவதும் இன்னொரு கதை.

அவற்றை ஒதுக்கிவிட்டு கல்வி விஷயத்தை கவனித்தால்... ஏழைகள் அவர்களின் வருமானத்தில் 80 விழுக்காட்டை உணவுக்காகவே செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.  இந்நிலையில் அக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வது எவ்வாறு?

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குழந்தைகளுக்கும் கல்விக்கண் திறக்க பெரும்பங்காற்றியவர் பெருந்தலைவர் காமராசர்.  அதன்பிறகு அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்டோரின் சமூக சீர்திருத்தங்களால், கற்றலின் அவசியம் உணர்ந்து, உயர்கல்வியை முடித்து தனது திறனாலும், இடஒதுக்கீட்டின் உதவியோடும், அரசுத்துறையில் உயர் பதவிகளையும் வகிக்கும் அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்து வருகின்றனர். ஆனால் "தான் பல்லக்கில் செல்ல வேண்டுமானால், அதைத் தூக்குவதற்கு நான்கு பேர் தேவை" என்ற மனுதர்மத்தில் ஊறிய ஆரிய அரசியல், மொழித்திணிப்பின் மூலம் நவீன முறையில் வர்ணாசிரமக் கொள்கைகளை அமல்படுத்துகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

தேசிய மொழித் தேவையும் - விளிம்புநிலை மாணவர்களும்

'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது' எந்தவொரு நாட்டுக்கும் தேசிய மொழி என்பது தேவை என்று வாதிடுகின்றனர் ஒரு தரப்பினர்.  ஆனால் இந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, உலகின் பழமை வாய்ந்த மொழிகளில் முதன்மையான செம்மொழியான தமிழ்மொழிக்கு ஏன் கொடுக்கக்கூடாது? என்பதே மற்றொரு தரப்பின் வாதம். இந்தியாவில் அதிக மாநிலங்களில் பேசப்படும் மொழியைத்தான் தேசிய மொழியாக்க முடியும் என்றாலும், அதை விருப்பத்தோடு கற்க வகை செய்யலாமே? இந்தி மொழியிலும் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த வகுப்புக்கே செல்ல முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளை பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தக்கூடாது என்பதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

குழந்தைகள் உளவியலும் - அந்நிய மொழியும் 

“குழந்தைகளுக்கு அறிவியலை ஒரு அந்நிய மொழியில் கற்பிக்க முயல்வது இயற்கைக்கு மாறானது, அறநெறிக்குப் புறம்பானது என்று நான் கருதுகிறேன். அவர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்வார்கள், ஆனால் அறிவியல் உணர்வை இழப்பார்கள்” என்று கூறியிருக்கிறார் இந்தியாவின் சிறந்த இயற்பியல் அறிவியலாளர் சர் சி.வி. இராமன்.  அந்த வகையில் எந்த மொழியையும் விருப்பத்தின்பேரில் கற்கச் செய்யலாமே தவிர திணிக்க முயல்வது இயற்கைக்குப் புறம்பானது மட்டுமல்ல, குழந்தைகளின் உளவியலை பாதிக்கக்கூடியதும் ஆகும்.  

ஏற்கெனவே மத்திய அரசு 'ஹிந்தி பிரசார் சபா' போன்றவற்றின் மூலம் இந்தி பேசப்படாத மாநிலங்களிலும் இலவசமாக கற்றுக்கொடுத்து இந்திக்கு ஊட்டமளித்து வளர்த்து வருகிறது.  அந்த வகையில், பள்ளிக்கூடத்திலும் இந்தியை ஒரு பாடமாக வைத்து விருப்பமும் திறமையும் உள்ள மாணவர்களை தனித்தேர்வுகளை எழுதி இந்தியில் புலமைபெற ஊக்கப்படுத்தலாமே தவிர,  மும்மொழிக்கொள்கை என்று இந்தியைத் திணிப்பதால் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் கல்விக்கனவு கலைக்கப்படும் என்பதே மறுக்க முடியாத உண்மை. 

பட்டதாரிகளும் - வேலையில்லாத் திண்டாட்டமும் 

2017ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த 140 துப்புரவாளர் பணியிடங்களுக்கு இரண்டாயிரத்து 500 பேர் தேர்வை எழுதினர்.  அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.பில்., படித்த முதுகலைப் பட்டதாரிகளும்கூட தேர்வை எழுதினார்கள்.  தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இந்த லட்சணத்தில் இருக்கும் போது, தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கான அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி தேர்வில்கூட தமிழ் தெரியாத பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு ரத்தினக் கம்பளத்தை விரித்திருப்பதான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியதும், வெளி மாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதி 1955ஆம் ஆண்டுமுதலே அமலில் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்ததும் தனிக்கதை.  

இந்தி திணிப்பும் - தமிழகத்தின் இட ஒதுக்கீடு அழிப்பும்

பல்வேறு போராட்டங்களுக்கிடையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மிக அதிக இடஒதுக்கீடு (69%) அமல்படுத்தப்பட்டது.  இந்த இட ஒதுக்கீட்டினால், உயர்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு எவ்வளவு திறமையிருந்தாலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறைவான வாய்ப்பே கிடைப்பதாகவும், திறமையே இல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுவதாகவும் ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  மற்ற மாநிலங்களைப்போலவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.  இந்நிலையில், இந்தி திணிப்பால் முழுக்க முழுக்க பாதிக்கப்படப் போவது தமிழகம்தான்.

ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள கிராமப்புறக் குழந்தைகள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவே திண்டாடி வரும் நிலையில், ஆங்கில பாடத்தை அவர்கள் விருப்பத்துடன் கற்கும் வகையில், திறமையான ஆசிரியர்களை உருவாக்கி கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்நிலையில்,  இந்தியும் திணிக்கப்பட்டால், கிராமப்புற ஏழை எளிய சமூகத்துக் குழந்தைகள் பள்ளிப்படிப்பையே தாண்ட முடியாமல் முடங்கிப்போவர் என்பதோடு, அதிக  இடஒதுக்கீடும் தானாக ஒழிந்துவிடும் என்ற உள்நோக்கத்தையும் புரிந்து விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.     

ஆரம்ப காலத்தில் ஆரியர்களின் வர்ணாசிரமக் கொள்கைப்படி மக்கள் சாதிவாரியாக பிரித்தாளப்பட்டு, "ஆண்டான்-அடிமை" என்று வாழ்ந்தனர்.  பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சமூக சீர்திருத்தப் போராட்டங்களின் பயனாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் இப்போதுதான் ஓரளவுக்கேணும் கல்வியறிவையும் வேலை வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள்.  ஆனால் அவர்களை ஆதிக்க சாதியினருக்கு அடிமை வேலையை செய்யும் நிலைக்கே மீண்டும் தள்ளிவிடாமல் - தவறான கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொள்கைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக எதிர்க்கட்சிக்கு மட்டுமல்லாது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இருக்கிறது.  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.