தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் நடிகர் சிங்கமுத்து மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், சிங்கமுத்துக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு ஐசியூவில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று நடிகர் சிங்கமுத்துவின் மகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிங்கமுத்துவுக்கு ஏற்பட்ட இந்த திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தேர்தல் பரப்புரை கைவிடப்படும் நிலை ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.