ETV Bharat / city

பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்த மோடி: நடிகர் சித்தார்த்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார்.

sidharth
author img

By

Published : Mar 22, 2019, 3:16 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “PM Narendra Modi" என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இதன் ட்ரைலரும் அண்மையில் வெளியானது. ஆனால் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற திரைப்படங்களை வெளியிடக்கூடாது என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திரமோடி படத்தின்ட்ரெய்லரைப் பார்க்கும்போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தனி ஆளாக எதிர்த்து நின்று சுதந்திரம் வாங்கித்தந்த மோடி குறித்து ஏன் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. மதச்சார்பு கொண்ட நக்சல்களால் உருவாக்கப்பட்ட மோசமான உத்தியாக இருக்கிறது.

#PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கும் திரைப்பட இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது என்னுடைய மனது குழம்புகிறது. இந்த ட்ரெய்லரைப் பார்க்கும்போது ஜெயலலிதாவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு படங்கள் எப்படி வரும் என்று தெரியவில்லை. உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாற்றையே மாற்ற முயற்சிப்பதை மன்னிக்கவே முடியாது'' என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.