இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “சென்னையில் கரோனா தொற்றின் காரணமாக பெரும்பாலும் எந்தவிதமான புகாரும் பதிவாகவில்லை. காவல் நிலையங்களுக்கு நேரில் வந்து புகார் அளிப்பதை மக்கள் முற்றிலும் தவிர்த்துவிட்டனர். பெண்கள் பாதுகாப்பிற்கான 1091, 102 போன்ற சேவைகள் மூலம் குடும்ப வன்முறை தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நோய்த் தொற்று பரவாமல் இருக்க சமூக விலகல், தனிநபர் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் ஆணையத்தை பல்வேறு விதமான நபர்கள் தொடர்புகொண்டு வீடுகளில் பெண்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக மாநில மகளிர் ஆணையமும் சுட்டிக்காட்டுகிறது.
மதுபானக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டு விட்டதால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆண்களால் பலவிதமான இன்னல்களுக்கு பெண்கள் ஆளாகுவதாகவும், அனைவரும் இல்லத்திலேயே இருப்பதால் கூடுதலான வீட்டு வேலைக்கு உட்படுத்தி தொடர்ந்து பல்வேறு விதமான குடும்ப வன்முறைக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஏதாவது வன்முறை நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது 181 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம் என மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான புகார்களை கையாள தமிழ்நாடு அரசு மனநல ஆலோசகர்களை மாவட்ட வாரியாக நியமித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி - காவல்துறை விசாரணை!