திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தயாரிப்பாளர் சங்கத்திற்கு வலிமை மிக்க தலைமை தேவை. அதனால்தான் பாரதிராஜாவை அங்கே போட்டியிட சொல்லியிருக்கிறோம்.
தேசியக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டயலாக்கை படத்தில் பேசினால் மட்டும் போதாது, வெளியில் வந்தும் பேச வேண்டும்.
உயர்ந்த நிலையில் உள்ள இயக்குநர்கள் சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி தெரியாமல், தங்களின் திரைப்படங்களில் மட்டும் முற்போக்கான கருத்து, புரட்சிகரமான கருத்து பேசுவது ஏற்புடையது அல்ல” என்றார்.