ETV Bharat / city

ஆருத்ரா தரிசன விழா : ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து வழக்கு ! - Seeking permission for arudra dharsan to other districts devotes

சென்னை : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா தரிசன விழா : ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து வழக்கு !

author img

By

Published : Dec 25, 2020, 10:29 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த உற்சவத்தில் அம்மாவட்டத்தைத் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி அறிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில்,“ பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளை பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். ஏற்கெனவே பிற மாவட்டங்களுக்கு பயணிக்க பின்பற்றப்பட்ட இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆருத்ரா தரிசன விழா : ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து வழக்கு !
ஆருத்ரா தரிசன விழா : ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து வழக்கு !

இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக அவசர வழக்காக இன்று (டிச.25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், “சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்” என உத்தவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : ஸ்ரீகாளியம்மன் கோயில் கொடை விழாவில் அன்னதானம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.