டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னதாக எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றம் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் முதற்கட்ட விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கான அறிக்கை தமிழ்நாடு அரசால் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை எனவும், முந்தைய ஆட்சியில் நடந்தவைகளை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய ஆளும் கட்சி செயல்படுவதாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் முகு ரோத்தகி தெரிவித்தார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போது விசாரண அறிக்கையையும் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழு தொடர்பான அறிக்கையை நீதிமன்றமே அளிக்க மறுப்பது வேதனைக்குரியது என நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். மேலும் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகாரில் விசாரணை : கைது செய்ய வாய்ப்பு ?