ETV Bharat / city

முற்பட்ட பிரிவினருக்கு 28 கட்ஆஃப் போதும்- எஸ்பிஐ அதிரடி! - பொது வகுப்பினர்

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் தேர்ச்சிபெற கட்ஆஃப் மதிப்பெண் வெறும் 28 இருந்தாலேபோதும் என்ற பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு பலதரப்பு மக்களின் விமர்சனத்திற்குள்ளாகி-வருகிறது.

sbi
author img

By

Published : Jul 24, 2019, 2:33 PM IST

Updated : Jul 24, 2019, 2:45 PM IST

பாரத ஸ்டேட் வங்கியின் 8,653 காலிப் பணியிடங்களுக்கான எழுத்தர் தேர்வு ஜூன் மாதம் 22, 23, 30ஆம் தேதிகளில் நடைபெற்றது. நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். முதற்கட்டமாக நிலைத்தேர்விற்கான முடிவுகள் நேற்று இரவு வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்வு முடிவுகளில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஒருவர் நிலைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் கட்ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்.

இந்தக் கட்ஆஃப் மதிப்பெண்களே தற்போது விமர்சனத்திற்குள்ளாகி-வருகிறது. அதாவது, பொதுப்பிரிவினர், எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவினருக்கு கட்ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும், எஸ்.டி. பிரிவினருக்கு 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் தேர்ச்சிபெற கட்ஆஃப் மதிப்பெண் வெறும் 28 இருந்தால்போதும் என்றநிலை உருவாகியுள்ளது.

  • ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம்.

    பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது.#10percentreservation ஐ உடனடியாக ரத்து செய்க! pic.twitter.com/1DPexec2Yr

    — M.K.Stalin (@mkstalin) July 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பாரத ஸ்டேட் வங்கித் தேர்வில் ஓ.பி.சி., எஸ்.சி. பிரிவினர் 61.25 கட் ஆஃப் மதிப்பெண்களும் எஸ்.டி. பிரிவினர் 53.75 கட்ஆஃப் மதிப்பெண்களும் எடுக்க வேண்டிய நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவினருக்கு வழங்கியுள்ள பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் தனது பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்

Intro:Body:

SBI exam issue

Conclusion:
Last Updated : Jul 24, 2019, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.