ETV Bharat / city

ஆழம் பார்க்கும் சசிகலா - பதற்றத்தில் அதிமுக தலைவர்கள்! - அதிமுக கட்சி புகைச்சல்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாகி உள்ளது.

sasikala audio tape viral discussed, சசிகலா  ஆழம் பார்க்கும் சசிகலா, பதற்றத்தில் அதிமுக தலைவர்கள், அதிமுக,  எடப்பாடி பழனிசாமி, ஆடியோ, ஓபிஎஸ், இபிஎஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், மீண்டும் அரசியலுக்கு வருவேன், அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி, அறிக்கை போர், முக்கிய செய்தி, அதிமுக கட்சி புகைச்சல்
சசிகலா அரசியல்
author img

By

Published : Jun 14, 2021, 3:42 AM IST

சென்னை: அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறாடா, செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தேர்ந்து எடுப்பதற்கான சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூன் 14) கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், சசிகலா தரப்பில் தொடர்ந்து ஆடியோ வெளியாகி வருவது அதிமுக மூத்த தலைவர்களை பதற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. நாளைய கூட்டத்தில் இது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா பேசி வருவதால் நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

சட்டபேரவை தேர்தலுக்கு முன்பு சசிகலா தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி இருக்க போவதாக வெளிப்படையாக அறிவித்து தமிழக அரசியல் நிகழ்வுகளை வீட்டில் இருந்து உன்னிப்பாக கவனித்து வந்தார், தொடர்ந்து ஆன்மிக தலங்களுக்கும் தொடர் பயணம் செய்து வந்தார். தேர்தல் முடியும் வரை அமைதி காத்த சசிகலா, தற்போது தொண்டர்களிடம் பேசி வருவது அரசியலில் ரீ- என்ட்ரி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதுவரை 30க்கும் மேற்பட்ட ஆடியோ பதிவுகள் சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. முதன்முறையாக கடந்த வியாக்கிழமை (ஜூன் 10) வெளியிட்ட ஆடியோ பதிவில்., அதிமுகவை தன்னிடம் இருந்து பிரிக்க முடியாது எனக் கூறியுள்ளார். முந்தைய ஆடியோவில் கட்சி என குறிப்பிட்டு வந்தவர், வெளிப்படையாக அதிமுகவை மீட்டெடுப்பேன் எனப் பேசி வருகிறார்.

கடந்த மே10ஆம் தேதி எதிர்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பது குறித்து ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கடும் விவாதம் நடந்து, ஒரு வழியாக எதிர்கட்சி தலைவர் பதவியை இபிஎஸ் பெற்று விட்டார். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே அதிகார போட்டி குறித்த பனிப்போர் நடந்து வரும் நிலையில் , புதிதாக ஆடியோ வெளியாகி வருவது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆடியோ விவகாரம் குறித்து எந்தவொரு கருத்தையும் கூறாமல் ஓபிஎஸ் மயான அமைதி காத்து வருகிறார்.

சசிகலா ஆடியோவில்., கட்சியை விரைவில் சீரமைத்து விடுவேன், உரிய நேரத்தில் தலைமையேற்று அனைத்தையும் சரிசெய்து விடுவேன் என பேசி இருந்தார். தொடர்ந்து மேலும் சில தொண்டர்களிடம் இவரே போன் செய்து நலம் விசாரிப்பது, கொரானா முடிந்த உடன் அனைவரையும் சந்திப்பதாகவும், கட்சியை மீட்டு விடலாம் எனப் பேசிவருகிறார்.

சசிகலா அமமுக தொண்டர்களிடம் பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்து இருந்தார், இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏ எனக் கட்சி நிர்வாகிகளின் பதவியை சொல்லியே பேசி வருவது குறிப்பிடதக்கது.
அரசியலை விட்டு ஒதுக்கி விட்டதாக அவரே அறிவித்து விட்டார் என எடப்பாடி கூறி வரும் நிலையில் விரைவில் அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதுரையை சேர்ந்த இளைஞரணி செயலாளரிடம் பேசிய அவர்., விரைவில் கட்சியை மீட்டு விடலாம், கட்சியை அழிக்க விடமாட்டேன், கவலைப்படாமல் இருங்கள் என பேசி உள்ளார். இன்று மட்டும் 5 ஆடியோகளை வெளியிட்டு உள்ளார், மேலும் சில ஆடியோக்களையும், சட்டரீதியான நடவடிக்கை துவங்குவார் என சசிகலா தரப்பிடம் பேசிய பொழுது தெரிவித்தனர்.

அறிக்கை போர்

தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பிரதமருக்கும் தனித்தனியாக கடிதங்கள் டெல்லி பறக்கின்றன.

இது குறித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கேட்டபொழுது, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நானும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அவர்களும் கடிதம் எழுதுவதாக தெரிவித்து வருகின்றனர்.

திமுக அமைச்சர்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரானா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடன் இணைந்து கலந்துகொண்டார். மாறாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

தற்போது தனித்தனி அணியாக இருவரும் செயல்பட்டு வருவது அதிமுக தொண்டர்களிடையே சோர்வை உண்டாகி உள்ளது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு குறிப்பிட்ட பதவியை பெற்று தராதது அவரது தரப்பை அதிருப்தி உள்ளாகி உள்ளது, கொறாடாவை பதவியை கைப்பற்ற கேபி முனுசாமி அல்லது எஸ்.பி.வேலுமணி காய் நகர்த்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் துணை தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார், அவரை சமாதானப்படுத்தவும், சசிகலா விவகாரம் குறித்து விரிவாக இன்று ஆலோசிக்கப்பட இருக்கிறது.

பதற்றத்தில் அதிமுக தலைவர்கள்

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினையால் சிக்கி தவித்து வரும் நிலையில், சசிகலாவின் பொதுச்செயலாளர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. சட்டரீதியில் நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளதால் இதுவும் அதிமுக தரப்பை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி., அதிமுகவில் ஜெ இருந்தபோது ஆதாயம் அடைந்தவர்கள் மீண்டும் ஆதாயம் தேட முற்படுகின்றனர். சசிகலா அவர்கள் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டது இறுதியானது மீண்டும் சேர்க்கப்படுவது என்ற பேச்சிற்கு இடமில்லை எனப் பேசினார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது., கருவாடு கூட மீன் ஆகலாம் ஆனால் சசிகலா ஒரு போதும் அதிமுக உறுப்பினர் ஆக முடியாது எனவும், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என விழுப்புரத்தில் பேசினார். இதையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் வழிமொழித்து பேசி உள்ளார்.

அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி பேட்டி

இது குறித்து பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி அவர்கள்., அதிமுகவின் கொடி, சின்னம் எல்லாம் தற்போது இருக்கும் இரட்டை தலைமைகளுக்கு மட்டுமே சொந்தம், சசிகலா உள்ளிட்டவர்கள் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது. அதிகாரத்தை பிடித்து விடலாம் நினைக்கும் அவர்களின் கனவு பகல் கனவாக போகும் எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்., “அணி சேர்ந்து செயல்பட முயற்சிக்கிறார், கட்சியை முழுமையாக கைப்பற்றி தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற அச்சத்தால் அதிமுக முக்கிய தலைவர்கள் சசிகலாவை கட்சியில் இணைந்து கொள்ள தயாராக இல்லை, திமுக பாஜக என களம் மாறிய நிலையில் அதிமுகவிற்கான இடம் குறைந்து வரும் நிலையில் சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் வருவது காலத்தின் கட்டாயம், அவரின் நடவடிக்கைகள் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் சசிகலா வெளியிட்டு வரும் ஆடியோ அரசியல் அதிமுகவில் மாற்றத்தை உண்டாக்குமா என்பதினை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.