ETV Bharat / city

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 195

தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu sugarcane farmers
tamilnadu sugarcane farmers
author img

By

Published : Mar 19, 2022, 11:23 AM IST

இதுகுறித்து சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்துள்ளோம். கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டை போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். அதேபோல கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன், வல்லுநர் விதைக்கரும்பு. திசுவளர்ப்பு நாற்றுக்கள், பருசீவல் நாற்றுக்கள். ஒரு பரு விதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள். ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ராலிக் டிப்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

அத்துடன் சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக் கூடங்களை நவீனப்படுத்துதல் மூலம் சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகளை விரைந்தும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில் அமராவதி, அறிஞர் அண்ணா, செய்யார், செங்கல்ராயன், தருமபுரி, கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி - 2. எம்.ஆர்.கே. மதுராந்தகம், பெரம்பலூர், சுப்பிரமணிய சிவா, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் ஆகிய 15 கூட்டுறவு. பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்கள் மொத்தம் மூன்று கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.