ETV Bharat / city

மயானத்திற்கு சாலை வசதி கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமைக்கக் கோரிய வழக்கு

தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமைக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Road facilities
Road facilities
author img

By

Published : Jun 16, 2022, 6:59 AM IST

சென்னை: தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை முறையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குண்டும் குழியுமாக உள்ள பாதையில் செல்வதால் சில நேரங்களில் பிரேதங்கள் தவறி விழுந்துவிடுவதால், அந்த வழியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலங்கள் பெரும்பாலும் பிற சாதியினருக்கு சொந்தமானது என்பதால், அதில் இறங்கி செல்லும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முறையான சாலை வசதியை அமைத்துத் தரக்கோரி மே 6ஆம் தேதி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு, ஆதி திராவிட நலத்துறை, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு ஆகியோருக்கு மனு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பால் 3 மாதத்திற்கு பின்னர் முதல் இறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.