ETV Bharat / city

தனியார் பள்ளிகளில் சேர குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் - chennai private schools

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களை தேர்வு செய்தவற்கான குலுக்கல் இன்று (ஆக.19) நடைபெற்றது.

குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்

author img

By

Published : Aug 19, 2021, 2:27 PM IST

சென்னை: ’கில் ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன்’ மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு 175 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 15 மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல் முறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலையில் நடைபெற்றது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இதில் பின்பற்றப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து ஏழாயிரத்து 984 இடங்களுக்கு, 82 ஆயிரத்து 766 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்

அவர்களில், பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ள பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள், கல்வித்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று (ஆக.19) தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 438 பள்ளிகளில் நான்காயிரத்து 891 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும். இந்த இடங்களுக்காக 19 ஆயிரத்து 289 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவற்றில் 42 பள்ளிகளில் உள்ள 394 இடங்களுக்கு 241 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். எனவே குலுக்கல் இல்லாமல் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 396 பள்ளிகளில் உள்ள நான்காயிரத்து 497 இடங்களுக்கு 19 ஆயிரத்து 48 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் நான்காயிரத்து 497 மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கில் ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 15 இடங்களுக்கு 175 மாணவர்கள் முன்னதாக விண்ணப்பம் செய்திருந்தனர். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மத்திய சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல், பெற்றோர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் 15 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்களின் குழந்தைகளுக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'வரி குறைப்பினால் நாளொன்று 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.