ETV Bharat / city

பழவேற்காடு ஏரி முகத்துவாரம் விரைவில் நிரந்தரமாக திறப்பு - அரசு தகவல் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்ததும் மாசு ஏற்படுத்தாத வகையில் பழவேற்காடு முகத்துவாரம் நிரந்தரமாக திறக்கப்படும் என மீன்வளத்துறை, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

lake
lake
author img

By

Published : Sep 2, 2020, 3:26 PM IST

பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர்வார, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, அப்பகுதியை சேர்ந்த உஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தாக்கல் செய்த பதில் மனுவில், ” 760 ச.கி.மீ பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரி, வெள்ள நீர் வடிகாலாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வண்டல் மண் அகற்ற முகத்துவாரம் அடைக்கப்படுவதால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

முதற்கட்டமாக, பழவேற்காடு முகத்துவாரத்தை திறப்பது குறித்து ஐஐடி நடத்திய ஆய்வில் திட்ட மதிப்பாக 27 கோடி ரூபாய் செலவாகும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி பெற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கரோனா பரவல் காரணமாக கூட்டம் கைவிடப்பட்டது.

230 மீ கரைகளை பலப்படுத்தும் பணி காரணமாக முகத்துவாரம் அடிக்கடி மூடப்பட்டு, 50 மீ அகலம் மட்டுமே தற்காலிகமாக திறக்கப்பட்டு, பின்னர் கடந்த ஜூன் மாதம் மூடப்பட்டது. நிரந்தரமாக பழவேற்காடு ஏரியை திறக்க, நபார்டு வங்கியிடம் 27 கோடி நிதி விடுவிக்கக் கோரி அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், 27 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மாசு ஏற்படுத்தாத வகையில், பழவேற்காடு ஏரி முகத்துவாரம் நிரந்தரமாக திறக்கப்படும் ” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: செப். 7 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.