ETV Bharat / city

ஒடுக்கப்பட்டோர் மீது தாக்குதல்... தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம் - ramanathapuram attack

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
author img

By

Published : May 27, 2019, 2:33 PM IST

அருந்ததியின மக்கள் மீது ராமநாதபுரத்தில் கடந்த 19ஆம் தேதி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மே 17 இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலி. பூங்குன்றன், "ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடியில் நடைபெற்றிருக்கின்ற வன்முறை சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பிறந்த மண்ணில், ஒடுக்கப்பட்ட மக்கள் பல இயக்கங்களை நடத்திய மண்ணில் இது போன்ற சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. 2019 ஆம் ஆண்டிலும் பிறப்பின் அடிப்படையில் நாம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது என்பது மிகவும் வெட்கப்படத்தக்க சம்பவம் ஆகும்.

தகராறு

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று கருதுவதே மனித குலத்துக்கு பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். பேதமற்ற சமூகம்தான் மேலான சமுதாயம் என்று கூறுவர். ஆனால் அண்மையில் படித்தவர்களும் தங்கள் சாதி பெயர்களை சொல்லிக்கொள்ள அலைகிறார்கள். தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் தங்களை தேவேந்திர குல வேளாளர் என அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இவர்களும் பார்ப்பன சமுதாயத்தால் சூத்திரனாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணராமல் தனித்தன்மை வேண்டும் என்று கருதுகின்றனர். அந்த வகையில் பாப்பாக்குடியில் ஒடுக்கப்பட்டோரில் இருக்கும் உள்ள ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரின் வீடுகளை சூறையாடி, மக்களை தாக்கி உள்ளனர்.

அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள, பெரியாரை சுவரொட்டியில் ஒட்டுகிற அண்ணா திமுக அரசு இந்த தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்" என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 19 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்த தேவந்திரகுல வேளாளர் அருந்ததியினர தாக்கியதாகவும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோடட்த்தில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மே 17 இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பேசிய திராவிடர் கழகத் துணை தலைவர் கலி.பூங்குன்றன், "ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடியில் நடைபெற்றிருக்கின்ற வன்முறை சம்பவம் உள்ளபடிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பிறந்த மண்ணில், ஒடுக்கப்பட்ட மக்கள் பல இயக்கங்களை நடத்திய மண்ணில் இது போன்ற சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. 

2019 ஆம் ஆண்டிலும் பிறப்பின் அடிப்படையில் நாம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது என்பது மிகவும் வெட்கபடத் தக்க சம்பவம் ஆகும். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று கருதுவதே மனித குலத்துக்கு பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். பேதமற்ற சமுகம் தான் மேலான சமுதாயம் என்று கூறுவார். 

ஆனால் அண்மையில் படித்தவர்களும் தங்கள் சாதி பெயர்களை சொல்லிக் கொள்ள அலைகிறார்கள். தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் தங்களை தேவந்திர குல வேளாளர் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். படித்தவர்கள் கூட புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களும் பார்பான் சமுகத்தை பொறுத்தவரையில் சூத்திரனாக ஆக்கப்பட்டுள்ளான் என்பதை உணராமல் தனித்தன்மை வேண்டும் என்று கருதுகின்றனர்.

அந்த வகையில் பாப்பாக்குடியில் ஒடுக்கப்பட்டோர் சமுகத்தில் உள்ள ஒரு பிராவினர் இன்னொரு பிரிவினரின் வீடுகளை சூறையாடி, மக்களை தாக்கி உள்ளனர். அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள, பெரியாரை சுவரொட்டியில் ஒட்டுகிற அண்ணா தி.மு.க அரசு இந்த தீண்டாமைக்கு எதிரான நடவடிக்ககளை மேற்கொள்ள வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.