இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "பொங்கல் நன்நாளை சிறப்பாகக் கொண்டாட, அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகையை ஜன.4ஆம் தேதி முதல் ஜன.12ஆம் தேதி வரை வழங்க உத்தரவிடப்பட்டது.
அவற்றில் பொங்கல் தொகுப்பு பெறாமல் விடுபட்டவர்கள் ஜன.13ஆம் தேதி பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க ஏதுவாக இந்த கால அவசாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 18ஆம் முதல் 25ஆம் தேதிவரை (நியாயவிலைக் கடைகள் விடுமுறை நாள் தவிர) அனைத்து நாள்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுபட்டவர்கள் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 20ம் தேதி பள்ளிகள் திறப்பா? விரைவில் அறிவிக்கிறார் முதலமைச்சர்!