பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் அமைப்பினர் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதில் அங்கிருந்த பலர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் இணை ஆணையர் உள்பட ஐந்து காவலர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், போராட்டம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் தடுப்பைத் தாண்டி போராட்டக்காரர்கள் வந்ததால்தான் தடியடி நடத்தவேண்டியதாகிவிட்டதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போராட்டம்... தடியடி... போர்க்களமாய் மாறிய வண்ணாரப்பேட்டை