ETV Bharat / city

‘கோலம் போட்டது ஒரு குற்றமா’ - இளைஞர்களைக் கைது செய்த காவல் துறை, ஸ்டாலின் கண்டனம்! - police-arrested-caa-nrc-protesters-who-drawn-kolam-in-roads

சென்னை: தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Kolam
Kolam
author img

By

Published : Dec 29, 2019, 12:22 PM IST

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இச்சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலம் போட்டுக்கொண்டிருந்த நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை குண்டுக்கட்டாக தூக்கிக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

அவர்களை அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்கவைத்த காவல் துறையினர், சாலையில் அனுமதி இல்லாமல் கோலங்கள் போடக்கூடாது போராட்டங்கள் நடத்தக் கூடச்து என எச்சரித்த காவல் துறையினர் விடுவித்தனர். கோலம் போட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகக் கூறிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கண்டனம்
ஸ்டாலின் கண்டனம்

இதையும் படிங்க: திருநங்கை அன்பு ரூபியின் அன்பு சூழ் பயணம்...

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 29.12.19

சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்ட பெண்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்...

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் நாடு முழுமையாக கிளம்பியுள்ளது. இந்த சட்ட திருத்தம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானதாக இருப்பதால் இதனை எங்கள் மாநிலங்களில் ஏற்க மாட்டோம் என கேரள மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர்களும் அறிவித்துள்ளனர். நாடு முழுமையாக நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகத்திலும் தொடர் போராட்டம் நடந்தபடி உள்ளது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திறைத்துறையினர் உள்ளிட்டோரும் இப்போராங்களில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்புகளை கோசங்களாகப் பதிவு செய்தனர். அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் கோலம் போட்டுக்கொண்டிருந்த நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேரை குண்டுக்கட்டாக தூக்கிக் கைது செய்து அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்தனர். பின்னர் சாலையில் அனுமதி இல்லாமல் கோலங்கள் போடக்கூடாது போராட்டங்கள் நடத்தக் கூடச்து என எச்சரித்த காவல்துறையினர் அவர்களை விடுவித்தனர்.. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது..

tn_che_02_women's_arrested_by_police_while_making_kolams_against_cab_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.