ETV Bharat / city

ஒப்பந்தத்தை மீறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் - ராமதாஸ் குற்றச்சாட்டு!

சென்னை: பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : May 20, 2020, 8:02 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொண்டது. அங்கு அளவுக்கதிகமான பணியாளர்களும், ஆசிரியர்களும் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்றும், அவர்களை பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்வதன் மூலம் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை குறைக்க முடியும் என்றும் அப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அலுவலராக பணியாற்றிய சிவதாஸ் மீனா அரசுக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ’சி’ மற்றும் ’டி’ பிரிவுகளைச் சேர்ந்த 3,600 பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றி பணியமர்த்தப்பட்டனர். அப்போது, அண்ணாமலை பல்கலைக்கும், பணியாளர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், பணியாளர்கள் பிற அரசுத்துறைகளில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும், அதன்பின் அவர்கள் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், 2017ஆம் ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்ட 3,600 பணியாளர்களில் 2,040 பேரின் பணி நிரவல் ஒப்பந்த காலம் கடந்த 17ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவர்களை மீண்டும் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது எந்த வகையிலும் ஏற்க முடியாத, மனிதநேயமற்ற செயலாகும்.

எனவே, பிற அரசு நிறுவனங்களில் பணியாற்றி முடித்த 2,040 ’சி’ மற்றும் ’டி’ பிரிவு பணியாளர்களுக்கு உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி வழங்க வேண்டும். பணி நிரவல் காலத்தில் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு! - பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.