இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறை மொத்தப்பாடங்களின் எண்ணிக்கையை ஆறில் இருந்து ஐந்தாக குறைப்பது மாணவர்களின் மொழி ஆர்வத்தை குறைக்கச்செய்யும் நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதாவது ஒரு மொழியினை தேர்ந்தெடுக்கச் சொல்லும்போது ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தை ஒதுக்கித்தள்ளுவார்கள். ஏற்கனவே தமிழ்ப்பாடம் கட்டாயம் என்று சட்டம் இயற்றியது என்னவாகும்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தைப் புறக்கணிப்பார்கள். இதனால் தொடர்புமொழியும் துண்டிக்கப்படும். இருமொழிக்கொள்கை காற்றில் பறக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இறுதியாக, 10ஆம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களுக்கு இரண்டாம் தாள் கிடையாது எனப் பரிந்துரைப்பதும் மொழியின் தாக்கத்தை அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிக்கவும் மட்டுமல்லாமல், மொழி இலக்கணத்தையும், ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும் என கூறினார். பள்ளிக் கல்வித் துறையின் பரிந்துரையை நிராகரித்து மொழியின் வளர்ச்சியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.