ETV Bharat / city

மாநில தேர்தல் ஆணையம், உள்துறைச் செயலாளர், டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, மாநில தேர்தல் ஆணையம், உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Apr 9, 2022, 9:16 PM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளில், தேர்தல் நியாயமாக நடத்தப்படும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தேர்தலை நியாயமாக நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மூன்றாம் நபராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அதில், "நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தப்படாததால் பாதிக்கப்படும் எவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், மூன்றாம் நபராக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனவும், கோவையில் திருமண மண்டபத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகித்ததாகவும், அதைத் தடுக்க முயன்றதால் இரு பிரிவினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில், 105-வது வார்டில் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றதாகவும், திருவான்மியூரில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இவை நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்பதால், மாநில தேர்தல் ஆணையச்செயலாளர் சுந்தரவள்ளி, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும்" எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு பரிசுத்தொகை: அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.