ETV Bharat / city

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி - Chennai Metro Rail

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்துள்ளது.

புதிய மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

author img

By

Published : Apr 9, 2022, 8:16 AM IST

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கி ஏழு ஆண்டுகள் பூர்த்தி அடைந்து, பயண சேவையைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் முதல் கட்டமாக பரங்கிமலை - சென்ட்ரல், விமான நிலையம் - விம்கோ நகர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக மூன்று புதிய வழித்தடங்களில் 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மாதவரம் - சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே இப்பாதைகள் அமைய உள்ளன.

சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26.8 கி.மீ. நீளமுள்ள மூன்றாவது வழித்தடத்தில் ஒன்பது ரயில் நிலையங்கள் சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகின்றன. இதற்காக இந்த வழித்தடத்துக்கு இடையே உள்ள 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும், அதனை ஈடுகட்டும் வகையில் 1,596 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் தெரிவித்து சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரியது.

12 ஆயிரத்து 669 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்தில் 22 கோடியே 33 லட்சம் ரூபாய் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம், சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதையும் படிங்க: '10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.