ETV Bharat / city

பழவேற்காடு ஏரி விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப் பகுதியை தூர்வார கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt
author img

By

Published : Sep 10, 2019, 3:17 PM IST

இந்தியாவில் உள்ள உவர் நீர் ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய நீர்ப்பரப்பை கொண்டதாக பழவேற்காடு ஏரி இருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும், பக்கிங்காம் கால்வாய் என இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன.

ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவின் வட முனையிலும் தென்முனையிலும் இக்கலப்பு நிகழ்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்துவைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 1200 டன் மீன்கள் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படுகின்றன. மின்பிடிப்பதை மட்டும் தொழிலாக கொண்டு 12 ஆயிரத்து 370 மீனவர்கள் இந்த ஏரியை நம்பி உள்ளனர். மேலும், இப்பகுதி பறவைகள் சரணாலயமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், ஏரிக்கு வரும் ஓடைக் கழிவுகளாலும் தொழிற்சாலைக் கழிவுகளாலும் பழவேற்காடு ஏரியானது மாசடைந்து காணப்படுகிறது. ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதிகளை தூர்வாரும் திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கினாலும் இதுவரை முறையாக தூர்வாரப்படவில்லை என திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன், சேஷசாயி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Intro:Body:பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப்பகுதியை தூர்வார கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள உவர் நீர் ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய நீர்ப்பரப்பை கொண்டதாக பழவேற்காடு ஏரி இருந்து வருகிறது.

வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும், பக்கிகாம் கால்வாய் என இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன.

ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் வட முனையிலும் தென்முனையிலும் இக்கலப்பு நிகழ்கிறது.

வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 1200 டன் பழவேற்காடு ஏரியில் மீன்கள் பிடிக்கப்படுகிறது. மின்பிடிப்பதை மட்டும் தொழிலாக கொண்டு 12 ஆயிரத்து 370 மீனவர்கள் பழவேற்காடு ஏரியை நம்பி உள்ளனர். இதுமட்டுமல்லாமல் இப்பகுதி பறவைகள் சரணாலயமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஏரிக்கு வரும் ஓடை கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், பழவேற்காடு ஏரியானது மாசடைந்து காணப்படுகிறது.

ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர் வாரும் திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீனாலும் இதுவரை முறையாக தூரவாரப்படவில்லை என திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த உஷா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழக அரசின் செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு அக்டோபர் 15 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.