ETV Bharat / city

ரூ.26.85 கோடியில் பழவேற்காடு ஏரி சீரமைப்பு பணி - அமைச்சர் ஜெயக்குமார் - பழவேற்காடு ஏரி

சென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி நேர்கல் சுவர்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Oct 10, 2020, 1:40 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டு, முகத்துவாரம் அடைப்பட்டு விடுகிறது. இதனால் வங்கக் கடலுக்கு சென்று தொழில் செய்ய இயலாத நிலை ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி, நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்திட வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையின் அடிப்படையில், 2020-21ஆம் நிதியாண்டில் விதி எண் 110இன் கீழ், ரூ.26.85 கோடியில் பழவேற்காடு ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு, நேர்கல் சுவர்கள் அமைத்து நிரந்தரமாக நிலைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளன. எனவே, மீனவர்கள் இனி எவ்வித சிரமமும் இன்றி கடலுக்குச் சென்று, தொடர்ந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலைமை செயலகத்தில் கரோனா தடுப்பு பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.