ETV Bharat / city

பொதுக் குழுவுக்கு தடையா?: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்கு தடைக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கு, அவசர வழக்காக நாளை(ஜூலை 6) விசாரிக்கப்பட உள்ளது.

பொதுக் குழுவுக்கு தடை
பொதுக் குழுவுக்கு தடை
author img

By

Published : Jul 5, 2022, 12:09 PM IST

Updated : Jul 5, 2022, 1:33 PM IST

சென்னை: ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது. அதில், அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 4) இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது. இதுதொடர்பாக தனி நீதிபதியைதான் அணுக வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாள்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் எனக்கு கிடைத்தது. ஆகவே உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி நாளை(ஜூலை 6) வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல்

Last Updated : Jul 5, 2022, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.