ETV Bharat / city

'பொறியியல் படிப்பிற்கு மறுகலந்தாய்வு கிடையாது!' - No recounseling for engineering courses

சென்னை: பி.இ., பி.டெக் உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்புகளில் மீண்டும் கலந்தாய்வு நடத்த முடியாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்க ஆணையர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்கள்
author img

By

Published : Sep 3, 2019, 1:25 PM IST

Updated : Sep 3, 2019, 2:02 PM IST

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான இணையதள கலந்தாய்வு கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு லட்சத்து மூன்று ஆயிரத்து 330 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வின் முடிவில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 83 ஆயிரத்து 396 மாணவர்கள் சேர்வதற்கு இடங்களைத் தேர்வு செய்தனர். மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வழங்கியது, அதனைத் தொடர்ந்து மாணவர்களும் கல்லூரியில் சேர்ந்தனர். பொறியியல் படிப்பில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு மருத்துவப் படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வு செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவப் படிப்பிற்கான இடங்களைத் தேர்வு செய்து அங்கு சேர்ந்துள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதிக்கு மேல் நடத்த முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல எந்தக் கல்லூரியில் இடங்கள் காலியாக இருந்தாலும் அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Intro:பிஇ பிடெக் பொறியியல் படிப்பு மீண்டும் கலந்தாய்வு நடத்த முடியாது
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

Body:பிஇ ,பிடெக் பொறியியல் படிப்பில்
காலி பணியிடத்திற்கு மீண்டும் கலந்தாய்வு கிடையாது
தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் அறிவிப்பு
சென்னை,
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பிஇ, பிடெக் இளங்கலை பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த முடியாது என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 330 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு நடத்தப்பட்ட கலந்தாய்வில் 101 மாற்றுத்திறனாளிகளும்,130 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் ,330 விளையாட்டு வீரர்களும், 1,122 தொழில்கல்வி மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். அதேபோல் பொது கலந்தாய்வின் மூலம் 76 ஆயிரத்து 364 மாணவர்களும், துணைக் கலந்தாய்வில் 4548 மாணவர்களும் இடங்களை தேர்வு செய்தனர்.

கலந்தாய்விற்கு பணம் செலுத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை உறுதி செய்யாத மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வாய்ப்பின் மூலம் 801 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்தனர்.

பொறியியல் படிப்பில் 83 ஆயிரத்து 396 மாணவர்கள் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்தனர்.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்து மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வழங்கியது. அதனைத் தொடர்ந்து இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இடம் கிடைத்தால் பொறியியல் படிப்பு வேண்டாம் என உதறிவிட்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு அதிக அளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைகழகம் மற்றும் முதல் பத்து இடங்களுக்குள் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் தங்களுக்கான பிஇ, பிடெக் படிப்பில் ஏதாவது ஒரு பிரிவினை தேர்வு செய்திருந்தனர்.

பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வு செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பிற்கான இடங்களை தேர்வு செய்து அங்கு சேர்ந்துள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதிக்கு மேல் நடத்த முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல எந்தக் கல்லூரியில் இடங்கள் காலியாக இருந்தாலும் அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Sep 3, 2019, 2:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.