ETV Bharat / city

'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போஸ்டர் ஒட்ட எவருக்கும் அனுமதியளிக்க கூடாது' - urban local body elections 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போஸ்டர்கள் ஒட்ட எவருக்கும் அனுமதியளிக்க கூடாது என்றும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Feb 16, 2022, 5:38 PM IST

சென்னை மாநகராட்சியின் 117ஆவது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு இன்று(பிப்.16) வந்தது.

அப்போது நீதிபதிகள் தேர்தலை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதிக்கயளிக்க கூடாது. விதிமுறைகளை மீறி போஸ்டர்கள் ஒட்டியவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முன்னதாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்க கூடாது. இந்த உத்தரவை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கட்டட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என்று மாநகராட்சி விளம்பரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 21ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நெல்லையில் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.