ETV Bharat / city

நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி

நீதிபதி ராஜன் குழு அளித்த அறிக்கை அபத்தமானது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

பங்கேற்றார்
வேலூரில் தேசிய கல்வியாளர்கள் பேரவை சார்பிலான மாநில கூட்டத்தில்
author img

By

Published : Nov 2, 2021, 12:36 PM IST

வேலூர்: தேசிய கல்வியாளர்கள் பேரவை சார்பிலான மாநில கூட்டம், அக். 31 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தின் தலைவரும், முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தருமான பாலகுருசாமி தலைமையேற்று பேசினார்.

இக்கூட்டத்தில், தனியார் பள்ளிகளின் சங்கதலைவர் நந்தகுமார், கோவை பழனிசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சிருஷ்டி பள்ளிகள் குழுமத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த வேண்டும்

பின்னர் பாலகுருசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் மாணவர்களின் நலனை கருதி, தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளை உடனடியாக துவங்க வேண்டும்.

மாநிலத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வு என்பது ஒரு நாளும் கடவுளே நினைத்தாலும் ரத்து செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கை அபத்தமானது. இந்த அறிக்கையால் தமிழ்நாட்டிற்கு அவமரியாதை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் பட்டங்கள் பலனற்றுப் போகும்

இந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். இதனை பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றியமைத்திருந்தால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்திருப்பார்கள்.

மற்ற மாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு என்று குழு உள்ளது. அதே போன்று தமிழ்நாட்டிலும் கல்வி குழு, ஒன்றை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் வழங்கப்படும் பட்டங்கள், பயனற்று செல்லாததாக மாறிவிடும். மேலும், உயர் கல்வியில் ஆராய்ச்சிக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் நூலகம்....!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.