சென்னை: இன்றைய நிகழ்வுகள் செய்திகளின் தொகுப்பை காணலாம்.
- மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மடீட்சியா நடத்தும் தடுப்பூசி முகாம்
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மடீட்சியா சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று(ஏப்.24) முதல் நடைபெற உள்ளது.
- ஆந்திராவில் இன்று முதல் ஊரடங்கு
ஆந்திர மாநிலத்தில் இன்று(ஏப்.24) முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று உலக கால்நடை மருத்துவ தினம்
விலங்குகள் மற்றும் பறவைகளின் நலம் காக்கும் கால்நடை மருத்துவப் பணியாளர்களின் உன்னத சேவையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி சனிக் கிழமை உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
- முழு ஊரடங்கால் கொடைக்கானல், கீழச்சிவல்பட்டியில் இன்று வாரச்சந்தை
கொடைக்கானலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு நாள் முன்னதாகவே சந்தையை நடத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் டி20, 2021 கிரிக்கெட் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று(ஏப்.24) மோதுகிறது.
- மீனாட்சி திருக்கல்யாணம் இன்று!
பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்பு இல்லாமல் இரண்டாவது முறையாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று(ஏப்.24) நடைபெறுகிறது.