சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில், செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் மாணவர்களிடையே கரோனா தொற்றுபரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதில் பல மாணவர்களுக்கு உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) கரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் மறுபரிசீலனையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றன. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம்.
இதையும் படிங்க: மாணவர்களிடையே புதிய வகை கரோனா... பள்ளிகளை மூட உத்தரவு...