சென்னை: பத்திரப் பதிவுத் துறையில் ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் ஆதார் வழி அடையாளம் காண புதிய வழி விதிகளை தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை உருவாக்கியுள்ளது.
தற்போது இந்த நடைமுறையை திருநெல்வேலி, சேலம் மாவட்டத்தில் உள்ள 135 சார்பதிவாளர் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை விரிவுப்படுத்த ஏதுவாக உடனடியாக மேற்படி இரண்டு மண்டலங்களுக்குத் தனி பராமரிப்பு பொறியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவரைத் தொடர்புகொண்டு ஒரு புதிய கணினி தேர்ந்தெடுத்து தேவையான மென்பொருளை நிறுவிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, சேலம் மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் இந்த நடைமுறையைச் செயல்படுத்தி குறைகள் இருப்பின் அதை அறிக்கையாக மின்னஞ்சல் மூலம் பதிவுத் துறைக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 253 அலுவலகங்களில் இந்த நடைமுறை இருந்துவருகிறது.
இதையும் படிங்க: Economic Survey 2021-22: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு ஆக உயரும்!