சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சிறப்பான புத்தாக்க சூழலை உருவாக்கவும், புத்தொழில் நிறுவனங்களின் தரம் மேம்பட புத்தொழில் முனைவோர்களுக்கான தளத்தைக் கட்டமைக்கவும் தொடங்கப்பட்ட இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு, தலைமை நிர்வாக அலுவலராக சிவராஜா இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவராஜா இராமநாதன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: mall roof collapse: கனமழை : இடிந்து விழுந்த பிரபல மாலின் ஃபால் சீலிங்