ETV Bharat / city

வேளாண் துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகள் பேரவையில் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தி திறனை அதிகரிக்க உள்கட்டமைப்பு வசதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார்

வேளாண்மைத் துறை அமைச்சர், எம் ஆர் கே பன்னீர்செல்வம்
agriculture dept
author img

By

Published : Aug 28, 2021, 6:10 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆக. 28) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேளாண்மை துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார். அதன் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

  • வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும்
  • ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்மோட்டார் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தருவதற்காக 12 கோடி ரூபாய் செலவிடப்படும்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் பாரம்பரியப் பூங்கா 2022ஆம் ஆண்டில் இரண்டு கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.
  • விவசாயிகளை தொழில் முனைவராக மாற்ற 318 உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்கு 2.22 கோடி மதிப்பீட்டில் வர்த்தக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
  • வேளாண் இயந்திரங்களை கிராமப் பகுதிகளிலேயே பழுது பார்க்க ஏதுவாக திருச்சி மாவட்டம், குமுலூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு ஆண்டு வேளாண் பொறியியல் பட்டயப் படிப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்படும்.
  • பெண் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு அதிக அளவில் லாபம் ஈட்டவும், தினசரி வருமானம் பெற ஏதுவாக காளான் உற்பத்தி கூடம் அமைத்துக் கொள்ளவும் மகளிருக்கு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • நிலம் இல்லாத 4,077 விவசாயத் தொழிலாளர்களுக்கு 3.40 கோடி ரூபாய் செலவில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில், தோட்டக்கலை தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்.
  • தர்மபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், 1.29 கோடி ரூபாய் மதிப்பில் வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
  • தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்படும்.
  • வெற்றிலை சாகுபடியினை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 100 விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதைகள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருள்களை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், வேளாண்மை அறிவியல் நிலையங்களில் ஒற்றை சாளர விற்பனை மையங்கள் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • வேளாண் தகவல்கள் விரைவில் விவசாயிகளுக்கு சென்று சேரும் விதமாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் இணையதளத்தை 40 லட்சம் ரூபாய் நிதியில் மேம்படுத்தப்படுவதுடன், வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய காணொலிப் பாடங்கள், சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும்.
  • விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்கள், கல்லூரிகளில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்கலைக்கழக பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.
  • இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் தொலையுணர்வு தொழில்நுட்பம் மூலம் இயற்கை வளங்களை ஆராய்ந்து பயிர், மண், நீர் ஆகியவை குறித்த தகவல்கள் கணினிமயமாக்கப்படும்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தி திறனை அதிகரிக்க உள்கட்டமைப்பு வசதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
  • நானோ தொடர்பான ஆராய்ச்சியை பலப்படுத்துவதற்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நானோ தொழில்நுட்ப துறையானது, வேளாண்மை தொழில்நுட்ப மையமாக இரண்டு கோடி ரூபாய் நிதியில் மேம்படுத்தப்படும்.
  • திருப்பூர் மாவட்டத்தில் விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை சார்பில் 2021-2022ஆம் ஆண்டில் புதிதாக விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்படும். இதற்கென நடப்பாண்டில் 23.50 லட்சம் ரூபாய் நிதி செலவிடப்படும்.
  • பூச்சிக்கொல்லி மருந்து உரிமம் வழங்குதல், பூச்சிக்கொல்லி மருந்து சட்ட மேலாண்மை முறைகளை விரிவுபடுத்துவதற்கு, 2021-2022ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செயல்படும் வகையில் பெமிஸ் மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.