நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால், மக்களுக்கு உதவி செய்வதற்காக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி வந்தனர். அவர்கள், தொடர்ந்து, நிவர் புயல் மீட்புப் பணிக்காக பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வாறு, புதுச்சேரிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், புதுச்சேரி மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மக்கள் அதிகம் கூடும் பகுதியான பிரதான கடற்கரை சாலையில், பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 48 மணி நேரத்தில் அடுத்த புயல்!