ETV Bharat / city

தமிழ்நாடு ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக  வேண்டும் என்பதே எனது லட்சியம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கிரவுன் பிளாசா அடையார் பார்க் ஹோட்டலில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய ஏற்றுமதி விருதுகள் (Southern Region Export Excellence Awards) வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

author img

By

Published : May 11, 2022, 2:02 PM IST

Updated : May 11, 2022, 3:34 PM IST

சென்னை: கிரவுன் பிளாசா அடையார் பார்க் ஹோட்டலில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO-Federation of Indian Export Associations) தென்பிராந்திய ஏற்றுமதி விருதுகள் (Southern Region Export Excellence Awards) வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) 1965ஆம் ஆண்டில் மத்திய வர்த்தக அமைச்சகம், தனியார் வர்த்தக மற்றும் தொழில் பிரிவு ஆகியவற்றால் அமைக்கப்பட்டது. வெளிநாட்டு சந்தைகளில் இந்திய தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பாக இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக்க  வேண்டும் என்பதே எனது லட்சியம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
பிரியா ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு நட்சத்திர ஏற்றுமதியாளர்களுக்கான வெள்ளி விருது
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சிறு குறு தொழில்துறை அமைச்சர் டி.எம் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரியா புட்ஸ் (PRIYA FOODS) நிறுவனத்தை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
தென் பிராந்தியத்தில் நட்சத்திர ஏற்றுமதியாளருக்கான வெள்ளி விருது பிரியா ஃபுட்ஸ் (PRIYA FOODS) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய இந்த விருதை பிரியா ஃபுட்ஸ் மூத்த மேலாளர் வீராமசானேனி கிருஷ்ண சந்த் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 22 நாள்களாக சட்டப்பேரைவ மானியக்கோரிக்கை நடைபெற்று, அதனுடைய ஒப்புதலை பெற்று முடித்திருக்கிறோம். முதலமைச்சருக்குகூட ஒரு நாள் ஓய்வு கொடுக்காமல் அமைச்சர்கள் உழைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 5,000 ஏற்றுமதியாளர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தென் மண்டல ஏற்றுமதி 27% ஆக உள்ளது, அடுத்த 5 ஆண்டில் 35% ஆக உயரும் என நம்புகிறேன்.
இந்தியாவில் 8.9% ஏற்றுமதியுடன் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருக்கிறது. விரைவில் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம். தமிழ்நாடு தொழில் மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும்.
ஏற்றுமதி வர்த்தகம் 26 பில்லியன் டாலரில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 100 டாலராக உயர்த்த வேண்டும். ஏற்றுமதி உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ்நாடு ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக வேண்டும் மாற்ற என்பதே எனது லட்சியம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர் ஓவியங்கள், கோவில்பட்டி கடலைமிட்டாய், சிறுமலை வாழைப்பழம், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 41 பொருள்கள் புவிசார் குறியீடு பெற பரிசீலனையில் உள்ளது.
தனியார் அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து FIEO செயல்பட வேண்டும். FIEO மாநில அரசுடன் முழுமையாக இணைந்து செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது" என முதலமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்பதாக தகவல்

Last Updated : May 11, 2022, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.