ETV Bharat / city

ஃபைனான்ஸ் நிறுவன அதிபர் கொலை வழக்கு: மருமகளின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்தது அம்பலம்...! - கொலை மிரட்டல்

சென்னை: சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் நிறுவன அதிபர் உள்பட மூவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், அவரது மருமகளின் உறவினர்கள் கரோனா உடையணிந்து கொலை மிரட்டல் விடுத்திருந்தது தெரியவந்தது.

murder-case
murder-case
author img

By

Published : Nov 12, 2020, 10:51 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பிரோகி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் தலில்சந்த்(74). இவரது மனைவி புஷ்பா பாய் (70). இவர்களுக்கு சீத்தல்(38) என்ற மகனும், பிங்கி என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தலில்சந்த சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மகள் பிங்கி, அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தலில்சந்த், புஷ்பா, சீத்தல் ஆகியோரை நேற்று (நவம்பர் 11) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தறுக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்தனர். இதனிடையே, சம்பத்தன்று பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பிங்கியின் கணவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிங்கியின் கணவர் ஹேமந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொலை நடந்த வீட்டில் எனது மாமியார் புஷ்பா பாயின் தங்க நகைகள் மற்றும் லாக்கரில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சீத்தலின் மனைவி ஜெயமாலாவும் அவரது சகோதரர்களும் இதற்கு முன்பு தலில்சந்திடம் பணம் கேட்டு மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக தலில்சந்த் யானைக்கவுனி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் அளித்திருந்தார்" என்றார்.

murder-case

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜெயமாலாவின் உறவினர்கள் கரோனா உடையணிந்து வைரஸ் பரிசோதனை எடுப்பது போல் தலில்சந்த் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்தது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.