ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் செயல்பாடுகள் குறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, ”தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான ரசாயன உரங்கள், வேளாண் கருவிகள், விதை, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை சில்லரை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் நடமாடும் நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டுக்கு வரும். சென்னையில் இரண்டு நடமாடும் நியாயவிலைக் கடைகள் கொண்டுவரப்படும்.
தற்போது வெளிச்சந்தையில் ரூ.100, ரூ.110 என்ற விலையில் கொப்பரை கொள்முதல் நடைபெறும் நிலையில், ரூ.125 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சரால், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது“ என்று கூறினார்.
இதையும் படிங்க: கோயம்பேடு காய்கறி சந்தை செப் 28 இல் திறப்பு - துணை முதலமைச்சர் அறிவிப்பு