சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என மதுபாட்டிலில் அச்சிட்டு அரசே அந்த மதுவை விற்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, ” கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் மதுபான பாட்டில்களில் திருக்குறளா அச்சிடப்பட்டிருந்தது. அப்போதும் இதே வாசகம்தான் இடம்பெற்றிருந்தது. பூரண மதுவிலக்கு என்பதே அரசின் கொள்கை, அதை உடனடியாக அமல்படுத்த முடியாது.
உடனடியாக மது விற்பனையை நிறுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும். எனவேதான் படிப்படியாக கடைகளை மூடி பூரண மதுவிலக்கு என்றத் திட்டத்தை நோக்கி தமிழ்நாடு அரசு சென்று கொண்டிருக்கிறது “ என்றார்.
இதையும் படிங்க: ஓசூரை மிகப்பெரிய தொழில்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்கத் திட்டம் - அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!