ETV Bharat / city

’திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு சிசிடிவி பொருத்த வேண்டி வரும்’

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டிய நிலைமை வரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Jan 7, 2021, 5:04 PM IST

ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஸ்டாலின் நடத்துவது கிராம சபை அல்ல, குண்டர் சபை. குண்டர்களை வைத்து யாரையும் கேள்வி கேட்க விடாமல் கிராம சபை நடத்துகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஏனென்றால் திருட்டு அதிகமாகிவிடும்.

அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக கருத்துக் கூற முடியும். ஆனால், அடக்குமுறையை கையாண்டு ஜனநாயகத்தை படுகொலை செய்தவர்கள் திமுகவினர்.

’திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டி வரும்’

கரோனா காலத்தில் மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் அதனை கமல் ஹாசன் எதிர்க்கிறார். நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் கமல் ஹாசன். அது நிச்சயம் மக்களிடம் எடுபடாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தோல்வி பயத்தால் அதிமுக கிராமசபை கூட்டத்தை விமர்சிக்கிறது- கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.