ETV Bharat / city

தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம் - பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அரசு அலுவலர்களைத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கக் கோரி, அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Feb 2, 2022, 12:24 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 80 ஆயிரம் காவல் துறையினர், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களைத் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

தேர்தல் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பதிலாக, தேர்தல் முடிந்துவிட்ட ஊரகப் பகுதி அலுவலர்களைத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள்

அவர், தனது மனுவில், தேர்தலில் பெரும்பாலும் அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களைத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அளித்த விண்ணப்ப மனுவைப் பரிசீலிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கைவைத்துள்ளார்.

நீதிபதிகள் அதிருப்தி

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும், இதுபோன்ற வழக்குகள் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும், மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கைத் திரும்பப்பெறுவதாக பாபு முருகவேல் தரப்பில் கூறியதை ஏற்ற நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 2021இல் சென்னையில் மட்டும் 161 கொலைகள்! - போலீஸ் ரிப்போர்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.