ETV Bharat / city

ஒருதலை காதல் விவகாரம்; இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

ஒருதலை காதல் விவகாரத்தில் பெண்ணின் காதலரை கொலை செய்த இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ட்
ட்ட்
author img

By

Published : Oct 9, 2022, 7:37 AM IST

சென்னை: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அப்பெண்ணை ராமன் என்பவரும் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் தெரிந்த சக்திவேல், ராமனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமன், தனது உறவினர் கவுதமன் என்பவருடன் சேர்ந்து, சக்திவேலை கடந்த 2016ஆம் ஆண்டு பிப்.13ஆம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வெண்ணாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம், ராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கவுதமனை விடுதலை செய்தும் 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, ராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு நேற்று (அக்.8) விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட ராமன் தரப்பில், வழக்கில் ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க காவல் துறை தவறிவிட்டதால், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

ஆனால், குற்றச்சாட்டுகள் உரிய சாட்சிகளின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேரில் பார்த்த சாட்சியங்கள் ஏதுமில்லாமல், காதல் விவகாரத்தால் முன் விரோதம், குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலம், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டது ஆகிய சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

வழக்கில் உள்ள ஆதாரங்கள், ராமனை சந்தேகிக்கும் வகையில் இருந்தாலும், அவை உண்மை தான் என்பதை நிரூபிக்க போலீசார் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, ராமனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! பாய்ந்தது போக்சோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.