கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த முகமது ஷெரீப்(36) என்பவர் சென்னை விமான நிலையத்தில், துபாய் செல்ல வந்துள்ளார். போர்டிங் பாஸ் வாங்கியபின், பைகள் சோதனை செய்வதற்காக வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவர் வந்து கொண்டிருந்த போது, சோதனை கவுண்டரை நெருங்கியதும் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்(23) இவர் பையை சோதனைக்காக கேட்டுள்ளார். அப்போது திடீரென்று அந்த பெண்னின் கையை பிடித்து இவர் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அப்பெண் உட்பட அருகில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்.
பின் அச்சம்பவம் குறித்து விமான நிலையத்தில் இருந்த காவல்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு, முகமது ஷெரீபை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறுது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.